தேசிய அரசங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என்பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். மக்களை ஏமாற்றிய அரசங்கத்தை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என சூளுரைத்துள்ள ஸ்ரீலங்கா மக்கள் கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஒன்றிணைந்த எதிரணியினர் நடத்தும் பாதயாத்திரைக்கும் பூரண ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பு கிராண்ட் ஒரியன்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான அசங்க நவரட்னஇ சமீர சேனாரட்ன உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதன்போதே அக்கட்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தலைவரும் பொதுச்செயலாளருமான அசங்க நவரட்ன கருத்து வெளியிடுகையில்தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமானது சீனாஇ மற்றும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செல்வதாகவும் இடதுசாரி போக்கில் சென்றதன் காரணமாகவும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு இந்தியாஇ அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகள் விரும்பவில்லை. இதனாலேயே ஆட்சி மாற்றத்தை பாடுபட்டு மேற்கொண்டார்கள்.
தற்போது இலங்கை ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டுள்ளது. அவர்களின் தாளத்திற்கு ஏற்பவே ஆட்சியாளர்கள் நடமாடிக் கொண்டிக்கின்றார்கள். இந்த நிலைமையிலிருந்து நாட்டையும் பொதுமக்களையும் மீட்டெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் யுத்தத்தை வெற்றி கொண்டு நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவே மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வல்லவராகவும் காணப்படுகின்றார். பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றவல்ல அவருக்கு எமது தரப்பினர் பூரண ஆதரவளிப்பதற்கு தயாராகவுள்ளோம். ஆகவே இந்த நாட்டின் மோசமான நிலைமைகளை வெளிப்படுத்தும் விதமான எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியிலிருந்து கொழும்புக்கு மேற்கொள்ளப்படவுள்ள ஒன்றிணைந்த எதிரணியினரின் பாதயாத்திரைக்கு எமது கட்சி பூரணமான ஆதரவளிவை அளிக்கின்றது.
சந்திரிகாவின் செயற்பாடுகள்கவலை அளிக்கின்றன
ஸ்ரீலங்கா மக்கள் கட்சி இந்த நாட்டின் ஜனநாயகத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. விஜய குமாரதுங்க இந்தக் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். அவருடைய மனைவியான சந்திரிகா பண்டாரநாயக்கவும் இந்தக் கட்சியிலேயே 1992ஆம் ஆண்டுவரையில் அங்கத்தவராக இருந்துள்ளார். இருப்பினும் அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக நீடிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் அவர் அண்மைக்காலமாக தெரிவிக்கும் கருத்துக்கள் மற்றும் அவரது செயற்பாடுகள் மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளன. இந்த ஆட்சி மாற்றம் அவசியம் எனப்பிரசாரம் செய்தது முதல் தற்போது வரையில் ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் எடுக்கும் செயற்பாடுகள் மிகவும் கவலை அளிக்கின்றன.
கனவிலும் நினைக்கவில்லை
தற்போது பிரதமர் பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருக்கும்போது தான் பிரதமராக பதவிவகிப்பேன் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூலமே அவர் பதவியைப் பெற்று தற்போது சர்வாதிகாரப்போக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.
தற்போது ஊடகவியாளர்கள் மீது கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற் கொள்வதும்இ ஏதேச்சதிகாரமாக செயற்படு மாகவே அவரது செயற்படுகள் அமைந்திருக்கின்றன. இதனை பொதுமக்கள் எவ்வாறு ஜனநாயக செயற்பாடுகளாக ஏற்றுக்கொள்வது எனக்கேள்வியெழுப்பினார்
சமீர சேனநாயக்க கருத்து வெளியிடுகையில்
28ஆம் திகதி அரசாங்கத்தின் யதார்த்த நிலைமையை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் கண்டியிலிருந்தான பாதயாத்திரையில் பங்கு கொள்பவர்களுக்கு கேகாலையில் உபசாரமளிப்பதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் உபச ரிப்பை முழு நாடுமே அறியும். அவர்கள்பாதயாத்திரையில் பங்கு பங்குபற்றுபவர் களுக்கு எதிராக தாக்குதல்களையே நடத்து வதற்கு திட்டமிட்டுள்ளனர். அமைச்சர் ஜோன் அமரதுங்க மட்டுமல்ல முழு அமைச்சரவையே எமக்கு தாகசாந்தி நிலையம் அமைத்து உபசரிப்பதாக கூறினாலும் அவர்களின் பின்புலத்தை அனைவரும் அறிவோம்.அவ்வாறானவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு பலத்தை வெளிக்காட்ட வேண்டும். முழுநாட்டையும் ஏகாதிபத்தியத்திலிருந்து மீட் டெடுக்க வேண்டும் என்றார்.