பிரித்தானிய நண்பர்களையும் பழைய வாழ்க்கையையும் அதிகம் மிஸ்பண்ணும் இளவரசர் ஹரிக்கு, பிரித்தானியாவில் நிரந்தரமாக தனக்கென்று ஒரு வீடு தேவை என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
முடிந்துபோன தேனிலவு காலகட்டம்
எல்லாம் புதியது போல் தோன்றிய அமெரிக்க வாழ்க்கை மீதான சுவாரஸ்யம் குறைந்து போக, தனது தேனிலவு காலகட்டம் முடிந்துபோனதை உணரத் துவங்கியுள்ள ஹரிக்கு, தன் பழைய வாழ்க்கையும் நண்பர்களும் நினைவுக்கு வருவதாக தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn.
நிரந்தர வீடு தேடும் ஹரி
ஆகவே, பிரித்தானியாவில் தனக்கென நிரந்தரமாக ஒரு வீடு தேவை என ஹரி முடிவு செய்துள்ளார். ஹரி தன் பழைய வாழ்க்கையை மிஸ் பண்ணுவதுடன், தன் பிள்ளைகளான ஆர்ச்சியும் லிலிபெட்டும் தங்கள் தாத்தா பாட்டி மற்றும் பரம்பரை குறித்து அறிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். ஆகவேதான், பிரித்தானியாவில் ஒரு வீடு தேட அவர் திட்டமிட்டுள்ளார்.
மறைந்த எலிசபெத் மகாராணியார் தன் செல்லப் பேரனான ஹரிக்கும் அவரது மனைவியான மேகனுக்கும் பிரித்தானியாவில் பிராக்மோர் இல்லம் என்னும் வீட்டை பரிசாகக் கொடுத்திருந்தார். ஆனால், ஹரி தனது சுயசரிதைப் புத்தகத்தில் தன் குடும்பத்தினரை அவமதித்திருந்ததைத் தொடர்ந்து, மன்னர் அந்த வீட்டை ஹரியிடமிருந்து பறித்துக்கொண்டதால், பிரித்தானியாவில் ஹரிக்கென ஒரு சொந்த வீடு இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.