100 வயதில் காதலியைக் கரம்பிடித்த நபர்: பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

39 0

இரண்டாம் உலகப்போரின்போது தான் பணியாற்றிய பிரான்சிலேயே தனது காதலியைக் கைப்பிடித்துள்ளார் அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர்.

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்று வீர தீர செயல்கள் புரிந்தவரான ஹரால்ட் (Harold Terens), தனது 100ஆவது வயதில், 96 வயதாகும் தனது காதலியான ஜீனை (Jeanne Swerlin) சனிக்கிழமையன்று, அதாவது, ஜூன் மாதம் 8ஆம் திகதி, பிரான்சில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.

100 வயதில் காதலியைக் கரம்பிடித்த நபர்: பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம் | 100 Year Old Man Wedding France

 

பிரான்சின் நார்மாண்டியிலுள்ள Carentan என்னும் நகரில், அந்நகர மேயரான Jean-Pierre Lhonneur, ஹரால்ட், ஜீன் திருமணத்தை நடத்திவைத்தார்.

இந்த வயதில் இவர்களுக்கு இதெல்லாம் தேவை என்று நினைப்பவர்களைப் பார்த்து, காதல் என்பது இளைஞர்களுக்கு மட்டும்தான் என்ன? எங்களுக்கும் அந்த உணர்வெல்லாம் உண்டு என்கிறார் ஜீன்!

100 வயதில் காதலியைக் கரம்பிடித்த நபர்: பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம் | 100 Year Old Man Wedding France

 

விருந்தளித்த ஜனாதிபதி

100 வயதில் காதலியைக் கரம்பிடித்த நபர்: பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம் | 100 Year Old Man Wedding France

ஹரால்ட், ஜீன் தம்பதியருக்கு, சனிக்கிழமை மாலை, ஜனாதிபதி இல்லமான எலிசீ மாளிகையில் விருந்தளித்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான். அவர்களுடன், அமெரிக்க ஜனாதிபத்யான ஜோ பைடனும் விருந்தில் கலந்துகொண்டார்.

விருந்தின்போது, புதுமணத் தம்பதியருக்கு வாழ்த்துக்கள் என்று கூறி மேக்ரான் பாராட்ட, பிரெஞ்சு அமெரிக்க நட்பையும் கௌரவிக்கும் வகையில் அனைவருமாக ஷம்பேய்ன் அருந்தி மகிழந்தார்கள்.