கணேமுல்ல சஞ்சீவ பூஸா சிறைச்சாலைக்கு மாற்றம்

68 0

பாதாள உலக கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “கணேமுல்ல சஞ்சீவ“வை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி அன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, இவர் வீரகுல பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (10) நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.