பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட என்டன்மாவத்தை பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேக நபரொருவர் நேற்று (9 ) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 67 லீற்றர் 500 மில்லி லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் 2,835 லீற்றர் கோடா உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.