யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறை சஜித் பிரேமதாசவால் கையளிப்பு

48 0
யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் ஸ்மார்ட் வகுப்பறை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (9) கல்லூரிக்கு சென்று 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களுடன் ஸ்மார்ட் வகுப்பறையை கையளித்ததோடு, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கிவைத்தார்.