சந்தேக நபர் ஹதரலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்வத்த பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக கசிப்பு விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கசிப்பு விற்பனையினை நிறுத்துமாறு சந்தேக நபருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையினை மீறியும் சந்தேக நபர் கசிப்பு விற்பனை செய்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (10) கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.