துபாயில் பதுங்கியிருந்து நாட்டில் போதைப்பொருள் வர்த்தகத்தை வழிநடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அஹுங்கல்லே லொகு பெட்டி என்பவரின் முக்கிய கூட்டாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று (09) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காஹதுடுவ, கெபலகஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான சுமார் 13 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 02 கைத்துப்பாக்கிகள் மற்றும் போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட 02 கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.