யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கும் இடையில் இந்துச் சகோதரர்களின் போர் (Battle of the Hindu Brothers) என்னும் பெயரில் கிரிக்கெட் போட்டி முதன்முறையாக நடைப்பெறவுள்ளது.
குறித்த போட்டியானது ஜூன் மாதம் 14ஆம்15ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதைத்தொடர்ந்து, இரு பாடசாலை பழைய மாணவர்களுக்கான 20க்கு 20 போட்டியும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், நூறுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்த இரு பாடசாலைகளின் இந்த கிரிக்கட் தொடரின் ஆரம்பமானது இப்பாடசாலைகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆவலர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.