ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ராஜபக்சவை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என கூறி வந்தாலும், அடுத்த பொது தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு கூட்டணி இல்லாத காரணத்தினால் சம்பிக்க ரணவக்க இவ்வாறு செய்துள்ளதாக இணைந்துள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து வெளியேறினார், ஆனால் சமீபத்தில் அவர் மீண்டும் அந்த கட்சியில் அவர் சேர முயற்சித்துள்ளார். ஆனால் பதில் வராததால் இப்போது பொது ஜன பெரமுன கட்சி பக்கம் அவரது அவதானம் திரும்பியுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சிக்கு நேரடியாக செல்ல முடியாது என்பதால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து மாற்றுப்பாதையில் செல்வதே அவரது திட்டமாகும்.
எதிர்க்கட்சியின் சுயேச்சை உறுப்பினர் என்று கூறிக்கொண்டாலும், சம்பிக்க நீண்டகாலமாக ரணில் விக்ரமசிங்கவுடன் செயற்பட்டு வருகிறார்.