இந்தியா பயணமானார் ஜனாதிபதி!

66 0

மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா பயணமானார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இந்தியன் ஏர்லைன்ஸின் AI-282 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணித்துள்ளார்.

இலங்கை இராஜதந்திரிகளை ஏற்றிச் செல்லும் இந்த விமானம் முற்பகல் 11.40 மணிக்கு இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.