வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக அருள்ராஜ்..!

58 0
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய நிலையில் இலங்கை நிருவாக சேவையின் விசேட தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜே.எஸ்.அருள்ராஜ் கடந்த வாரம் கடமைகளை  வட மாகாண சுகாதார அமைச்சில் பொறுப்பேற்றார்.

2003 ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவைக்குள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் பிரவேசித்த இவர் கிண்ணியா உதவி பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் சிறிது காலம் திருகோணமலை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.