போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாயின!

56 0

யுக்திய நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளன. அதன் பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.