மலேசியாவின் கடற்கரை ஜோஹர் மாகாணத்தில் கடலில் எழுந்த இராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, படகில் இருந்த 20 பேர் காணமல்போயுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் இந்தோனேசியாவிலிருந்து ஜோஹர் மாகாணத்தின் ஊடாக சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் குடியேறியவர்களே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவிலிருந்து இந்தோனேசியர்கள் 62 பேர் மீண்டும் இந்தோனேசியாசெல்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு படகில் புறப்பட்டுள்ளனர்.ஜோஹர் மாகாணத்துக்கு அருகே படகு சென்ற போது கடலில் எழுந்த இராட்சதஅலையில் சிக்கி அவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.
நேற்று காலை கப்பலில் ரோந்து சென்ற கடலோர பொலிஸ்படையினர் படகு கவிழ்ந்துகிடப்பதை கண்டு விரைந்து சென்று தண்ணீரில் உயிருக்கு போராடிய கொண்டிருந்த 34பேரை அவர்கள் மீட்டுள்ளனர். நீரில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதுள்ளதோடு, மேலும் படகில்இருந்த 20 பேர் காணமால் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகிறது.