பதுளையில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு

58 0

பதுளை, கலன் கோபோ தோட்ட குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.

கும்புரேகெதர மஹகும்புர கஹட்டருப்ப பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுமார் 2 தினங்களுக்கு முன் கலன் கோபோ தோட்ட பகுதியில் அமைந்துள்ள குளத்துக்கு அருகாமையில் சட்டை மற்றும் பணம் ஆகியவை காணப்பட்டதாகவும், இவர் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் வேறு ஏதேனும் அசம்பாவிதம் மேற்கொள்ளப் பட்டுள்ளதா என பல கோணங்களில் கஹட்டருப்ப பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த குளத்தில் தேடுதலை மேற்கொண்டு வந்ததாகவும் இருப்பினும், குறித்த நபரின் சடலம் நேற்று மாலை வரை கிடைக்கவில்லை எனவும் கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை(08) காலை குளத்தில் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நீதிவான் பார்வையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்று பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கஹட்டருப்ப பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கஹட்டருப்ப பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.