4 வயது சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைதானவர் மீது கைதிகள் தாக்குதல்

63 0
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட 4 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்  சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (7) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த குகுல் சமிந்த என்ற நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இவர் 4 வயது சிறுமியைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெலிஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் நேற்று (7) சிறைச்சாலை கைதிகளால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.