மொட்டுக்கட்சியின் முக்கிய பதவியில் ரோஹித

62 0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நிறைவேற்று சபை மற்றும் அரசியல்பீடக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கட்சியின் அரசியலமைப்பில் புதிய தேசிய அழைப்பாளர் பதவியை அறிமுகம் செய்வதற்காகவே இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளன.