இலங்கை படையிடமிருந்தும் எதிர்பார்ப்பது என்ன? ஐக்கிய நாடுகள் சபை

240 0

ஐக்கிய நாடுகள் சபை சார்பாக அமைதி காக்கும் பணிகளுக்காக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்ரீபன் டுஞாரிக் தெரிவித்துள்ளார்.

இதனையே இலங்கை படையிடமிருந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக பாலியல் வல்லுறவுடன் தொடர்பு கொண்ட இராணுவ தரப்பினருக்கு அமைதிகாக்கும் படையில் இடம் தரப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்தை சேர்ந்த 100 பேர் ஹேய்ட்டிக்கு அமைதி காக்கும் படைகளுக்காக அனுப்புவது தொடர்பாக ஊடக சந்திப்பொன்றில் கேள்வி எழுப்பப்பட்ட போதே பேச்சாளர் இந்த கருத்தினை தெரிவித்தார்.

ஒவ்வொரு இராணுவத்தினரும் தனித்தனியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் பணிக்காக ஏற்றவர்கள் என பரிந்துரைக்கப்பட்டதன் பின்னரே, வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளுக்கு அனுப்பப்படுவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.