ஸீகா – இலங்கை உட்பட்ட எட்டு தெற்காசிய நாடுகளில் பரவுவதற்கான சாத்தியம்

231 0

ஸீகா (Zika) மற்றும் இபோலா போன்ற தொற்று நோய்கள், இலங்கை உட்பட்ட எட்டு தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உரிய சுகாதார பாதுகாப்பினை வழங்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ‘த ஹிந்துஸ்தான் டைம்’ செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டிஸ் மெடிக்கல் ஜேர்னலினால் தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

இந்த நாடுகளில் ஏற்கனவே காச நோய் எச் ஐ வி மற்றும் மலேரியா போன்ற நோய்களின் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 முதல் 95 சதவீதமானவர்களை டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.

அதேபோன்று 41 சதவீதமானவர்கள் சிக்கன் கூன்யா நோய் தாக்கத்திற்கு உள்ளாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.