நாடுமுழுவதும் 900 சிறுநீரக சிகிச்சை நிலையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்த சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கெபித்திகொல்லாவ மற்றும் பதவிய பிரதேசங்களில் சிறுநீரக மருத்துவ சிகிச்சை நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மருத்துவ நிலையங்களுக்கு அவசியமான மருத்துவர்கள் மற்றும் தாதிமார்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, 250 படுக்கைகள் கொண்ட மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை பொலனறுவையில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன்போது குறிப்பிட்டார்.