தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவு வகைகளை தயாரித்த 2ஆயிரத்து 716 நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 ஆயிரத்து 730 உணவு தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றிவளைப்பு மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 2 ஆயிரம் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.