கடந்த 2 4 மணித்தியால காலத்தில் நாட்டில் அதிக மழைவீழ்ச்சி காலி மாவட்டத்திலுள்ள போத்திவெல பகுதியில் பதிவாகியுள்ளது.
இப்பிரதேசத்தில் 128.9 மி.லீட்டர் மழை பெய்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு குறிப்பிடத்தக்களவு மழை பெய்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசம் தவிர்ந்த பகுதிகளில் மழை பெய்துள்ளதாகவும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.