மீதொடமுல்லை குப்பை மேடு இடிந்து விழுந்ததில் 40 வீடுகள் சேதம்

293 0

கொலன்னாவை, மீதொடமுல்லை குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சுமார் 40 வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் 3 மணியளவில் குப்பை மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழ ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினரின் 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது