கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் சுட்டெண்ணுக்கமைய உணவு பணவீக்கம் 0.0 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதுடன்,உணவல்லா பணவீக்கம் 1.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கொழும்பு நகர் பிரதேசங்களின் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத்தை முன்னிலைப்படுத்திக் கடந்த மே மாதத்துக்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை 2021 – 100என்ற குறியீட்டு சுட்டெண்ணுடன் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய 1.5 (ஏப்ரல்) காணப்பட்ட கொழும்பு நகர் பிரதேசங்களின் நுகர்வு பணவீக்கம் கடந்த மே மாதம் 0.9 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.அத்துடன் உணவு பணவீக்கம் 0.0 சதவீதமளவில் குறைவடைந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் உணவு பணவீக்கம் 2.9 சதவீதமாகக் காணப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் 0.9 சதவீதமாக காணப்பட்ட உணவல்லாத பணவீக்கம் கடந்த மே மாதம் 1.3 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.