சம்பள அதிகரிப்பிற்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு!

40 0

தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தோட்டக் கம்பனிகள் தாக்கல் செய்த மனு மீதான மேலதிக விசாரணையை எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. .

இந்த மனு இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சமர்ப்பணங்களை முன்வைத்தார்.

இதனையடுத்து மேலதிக சமர்ப்பணங்கள் மீதான பரிசீலனை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அகரபதன பெருந்தோட்டக் கம்பனி உட்பட 21 தோட்டக் கம்பனிகளினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் தொழில் ஆணையாளர் உட்பட 52 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனு இன்று சோபித ராஜகரன மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பான உண்மைகளை இம்மாதம் 31ஆம் தேதி உறுதிப்படுத்த வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டது.

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,350 ரூபாயாகவும் கொடுப்பனவு ரூபா 300 ஆகவும் மற்றுமொரு கொடுப்பனவாக ரூபா 80 ஆகவும் நிர்ணயம் செய்து தொழில் அமைச்சர் கடந்த தினம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக மனுதாரரான தோட்ட நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களிலும் அரசியல்வாதிகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிலாளர் துறை அமைச்சர் தங்களிடம் கலந்தாலோசிக்காமல் இதுபோன்ற முடிவை எடுத்திருப்பது இயற்கை நீதியின் சட்டக் கோட்பாட்டை மீறுவதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இது முழுக்க முழுக்க தன்னிச்சையான முடிவு என்றும் அதை வலுவிழக்கச் செய்யும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரியும் தோட்டக் கம்பனிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளன.