சைட்டத்துக்கு எதிராக இன்றும் ஆர்ப்பாட்டம்

334 0

மாலபே சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என, ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொடுக்காமல் அரசாங்கம், புதுவருட கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக, அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.