ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆசிரியர் என்பதுடன் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர் . இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுவரை 25 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இரவு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் தீயிட்டுச் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. .