வனசீவராசிகள் திணைக்களத்தால் தற்போது முகாமைத்துவப்படுத்தப்பட்டு வரும் 52 சுற்றுலா விடுதிகள் காணப்படுவதுடன், அவற்றின் மூலம் மிகவும் தரப்பண்பான சேவைகளை வழங்குவதற்காக குறித்த விடுதிகளின் பௌதீக வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பணிகளுக்கு சுயமாக முன்வந்து ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்ற தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தரப்பினர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொண்டு குறித்த சுற்றுலா விடுதிகள், தரப்பண்புடன் கூடிய சேவைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் தாவரங்கள் மற்றும் விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாகாத வகையில் பௌதீக அபிவிருத்திகளை மேற்கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரலைப் பெற்றுக் கொள்வதற்கும், அதற்கிணங்க தெரிவு செய்யப்படும் தரப்பினர்கள் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.