இளவரசர் ஹரியின் மகனுடைய பிறப்புச் சான்றிதழ்-தந்தை பெயர்?

52 0

இளவரசர் ஹரியின் மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பிறப்புச் சான்றிதழ் சமீபத்தில் ஊடகங்களில் வெளியான நிலையில், அதிலிருந்து சில சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளன.

தந்தை என்னும் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்

குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பிறப்புச் சான்றிதழில், தந்தையின் பெயர் என்னுமிடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பெயர், ஹரி அல்ல. அதற்கு பதிலாக, ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் டேவிட் (Henry Charles Albert David) என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹரியின் மகனுடைய பிறப்புச் சான்றிதழ்... தந்தை பெயர் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா? | Prince Harry Son Birth Certificate Father Name

 

 

அத்துடன், இளவரசர் வில்லியமுடைய பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்களில், ‘His Royal Highness Prince William Arthur Philip Louis’ (இளவரசர் வில்லியம்) என பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இளவரசர் ஹரியின் பெயரில், இளவரசர் என்னும் பட்டம் குறிப்பிடப்படவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இளவரசர் ஹரியின் மகனுடைய பிறப்புச் சான்றிதழ்... தந்தை பெயர் என்னவென்று குறிப்பிடப்பட்டுள்ளது தெரியுமா? | Prince Harry Son Birth Certificate Father Name

யார் இந்த இளவரசர் ஹென்றி?

இளவரசர் ஹரியின் நிஜப்பெயர் ஹரி அல்ல, ஹென்றி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், இளவரசர் ஹரிக்கு, ஹென்றி சார்லஸ் ஆல்பர்ட் டேவிட் என்ற பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை ஹரி என அழைக்க, ஊடகங்களும் அதையே பயன்படுத்த, இப்போது ஹரியின் உண்மையான பெயர் ஹென்றி என்பதே பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.