இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா சீனா அமெரிக்கா பிரான்ஸ் போட்டி

38 0

இலங்கையின் மூலோபாய வளங்கள் சொத்துக்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவதற்கான மற்றுமொரு உதாரணங்களாக இலங்கையின் காரீய சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கு இந்தியா சீனா பிரான்ஸ் அமெரிக்கா ஆகிய நாடுகள் போட்டியிடுகின்றன.

ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த துறையில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யார் அதிகபட்ட மதிப்புக்கூட்டலில் ஈடுபடுகின்றார்கள்  மேம்பட்ட தொழில்துறைகளிற்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதை பார்க்கவேண்டும் இலங்கையில் கைவிடப்பட்ட 3000 சுரங்கங்கள் உள்ளன நாங்க்ள அதிகமாக கோரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காரீய தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பில் இலங்கையும் இந்தியாவும் ஆராய்ந்துள்ளன.