போதைப்பொருளுடன் ஒருவர் கைது

44 0

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பாணந்துறை வலப்பன பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 1 கிலோ 850 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் சந்தேக நபரின் கைத்தொலைபேசியையும் பொலிஸார் கைப்பற்றினர்.