தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது.

977 0

ஏவிளம்பி என்ற பெயரை கொண்ட இந்த புதுவருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இன்று அதிகாலை 12.48 மணிக்கு பிறந்திருக்கின்றது.

திருகணித பஞ்சாங்கத்தின் படி புதுவருடம் அதிகாலை 2.04 க்கு பிறந்திருக்கின்றது.

இதன்படி வாக்கிய பஞ்சாங்க முறைக்கேற்ப புண்ணிய காலம் இன்று காலை 8.48 முதல் மாலை 4.48 மணிவரை என கணிப்பிடப்பட்டிருக்கின்றது.

திருகணித பஞ்சாங்கத்தின் புண்ணிய காலம் நேற்று இரவு 10.04 முதல் ஆரம்பமாகியுள்ளது.

இந்தநிலையில் பிறந்துள்ள புதுவருடம் இலங்கையில் தமிழர்கள் மத்தியில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

தமிழர்கள் மத்தியில் உள்ள பேதங்கள் கலையப்படும் போதே தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் புதிய சமாதானத்தை அடைய முடியும்.

எனவே, அந்த சமாதானம் நல்லிணக்கம் நாட்டின் ஐக்கியம் என்பவற்றுக்காக உலக வாழ் மக்களுடன் இணைந்து குறியீடு செய்தி சேவையும் தமது வாழ்த்துக்களை பகிர்ந்;து கொள்கின்றது.