உலக வாழ் தமிழ் – சிங்கள மக்களால் இன்று தமிழ் சிங்கள புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் விகாரைகளில் விசேட பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை பெற்று கொண்ட வெற்றியை பாதுகாத்து கொண்டு, நாட்டின் நல்லிணக்கம், சுகவாழ்வை மேலும் வலுவூட்டும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேன தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமரின் வாழ்த்து செய்தியில், இந்த நவீன உலகில் பிறந்திருக்கும் புத்தாண்டை, அனைவரும் தமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை ஒழித்து, ஒற்றுமையுடன் வரவேற்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வுகள் ஏற்பட புத்தாண்டு வழிகோலும் என எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவரால் விடுக்கப்பட்ட புதுவருட வாழ்த்து செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.