புதிய அரசியல் மாற்றத்திற்கு அணிதிரளும் மக்கள்சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார்

419 0

தமிழ் மக்கள் தற்போது வெறுமைக்குள்ளும் விரக்தியிலும் வாழ்கின்றனர், நம்பிக்கையோடு தெரிவ செய்தஅரசியல் தரப்புகள் எதனையும் செய்யாத நிலையில் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தாங்களே தீர்வு காணும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகின்றனர்.  இதனால்தான் மக்கள் ஒரு புதிய அரசியல்மாற்றத்திற்காக அணிதிரளும் நிலைக்குள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான முருகேசு சந்;திரகுமார்தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பிரதேசத்தில் சமத்துவம், சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்இடம்பெற்ற சந்திப்பின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்களின் உணர்வுகளையும், வலிகளையும் புரிந்துகொள்கின்ற அரசியல் தலைவர்கள் தற்போது இல்லை.இதனால், தமிழ் மக்களுடைய  அடிப்படை பிரச்சினைகள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரைதீர்க்கப்படாது நீண்டு கொண்டிருக்கிறது. காணிப் பிரச்சினை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின்பிரச்சினை, வேலையில்லா பிரச்சினை என எல்லாப்பிரச்சினைகளும்  தீர்வின்றி தொடர்கிறது. இதற்காகமக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றார்கள்.

தற்போது இருக்கின்ற அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கைஅற்றதன் விளைவே மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக தாங்களே போராடுகின்ற நிலைமையைஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த அவர்

இவ்வாறான விரக்த்தியும் விளைவும் காரணமாகவே தமிழ் மக்கள் புதிய அரசியல்  மாற்றத்திற்காக அணித்திரண்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் தமக்கான அரசியலை கையிலெடுக்க வேண்டும்.அதனைப் பேசவேண்டும். விவாதிக்க வேண்டும் அப்போதே ஆரோக்கியமான. மக்கள் நலனில்அக்கறையுள்ள நல்ல அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆதரவுதெரிவித்து சமூக மட்ட தலைவர்கள், பொது மக்கள் ஆகியோர் எனப்பல தரப்பினர் கலந்துகொண்டனர்.