வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 6 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் இன்று வியாழக்கிழமை (23) காலை விடுதலை செய்யப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சிறு குற்றம் பிரிந்தோர், தண்டப்பணம் செலுத்த முடியாதவர்கள் இவ்வாறு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை அத்தியாச்சகர் என். பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை நிகழ்வில் சிறைச்சாலை நலன்புரிச்சங்க அதிகாரிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறைச்சாலை அதிகாரிகளை வணங்கிய பின் நன்றி தெரிவித்து கைதிகள் சிறைச்சாலையில் இருந்து வெளியேற்றியமை குறிப்பிடத்தக்கது.