கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற அனுமதி

42 0

காலி மாவட்டத்திலுள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சரவை சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டிவ் இன்று வியாழக்கிமை (23)  அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இரண்டு தேசிய வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராப்பிட்டிய அமையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.