உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச் சென்றவர் கைது!

43 0

போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நண்பருக்கு  உணவுப் பொதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் ஜயசிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவராவார்.

கைது செய்யப்பட்டவர் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.