மோட்டார் சைக்கிள் மீது மரம் சரிந்து விழுந்து ஒருவர் காயம்

35 0

அட்டன், பொகவந்தலாவை வீதியில் வனராஜா வத்தை பகுதியில் புதன்கிழமை (22) மோட்டார் சைக்கிளில்  பயணித்தவர் மீது மரமொன்று சரிந்து விழுந்துள்ளது.

குறித்த பகதியில் வீசிய கடும் காற்றினால் மரம் சரிந்து விழுந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.