முல்லைத்தீவில் சுழல் காற்றின் தாக்கம் : காலநிலை வரலாற்று அறிவின் தேவை குறித்து பேசும் முதியவர்

51 0

முல்லைத்தீவு  உப்புமாவெளியில் நேற்று (22) மதியம் சுழல்காற்றின் தாக்கம் உணரப்பட்டுள்ள நிலையில் சிறிய நேர இடைவெளிக்கு நிலைத்திருந்த சுழல் காற்று அங்குள்ள பயன்தரு மரங்களை முறித்து விட்டுச் சென்றுள்ளது.

நீண்ட காலமாகவே உப்புமாவெளி, உடுப்புக்குளம் ஆகிய இரு கிராமங்களிலும் சுழல் காற்றின் தாக்கம் அதிகம் இருப்பதை அவதானிக்கலாம் என உடுப்புக்குளத்தில் பிறந்தது முதல் இன்றளவும் வாழ்ந்துவரும் வயோதிபர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.

சுழல் காற்றின் பாதை ஆங்கில எழுத்து எஸ் வடிவில் இருப்பதை தான் ஒவ்வொரு முறை காற்றின் தாக்கம் நிகழும் போது அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பாதை வழியே இருக்கும் எல்லா தாவரங்களையும் முறித்து விழுத்தி விட்டுச் செல்லும் போது அது பேரழிவு நிகழ்ந்தது போல் காட்சித்தோற்றம் ஏற்படும்.

அது போலொரு நிகழ்வே உப்புமாவெளியில் நடந்துள்ளது. குறுகிய நேரத்தில் வலுவான சுழல் காற்று வீசியது.அந்த சுழலில் சிக்குண்ட வாழை, தென்னை, கமுகு போன்ற பயிர்கள் சேதமாகியுள்ளன.

ஏற்பட்ட சேதங்கள்

கமுகு ஒன்றின் நுணிப்பகுதியை முறித்து விட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.அவ்வாறே வாழை மரங்களும் அவற்றின் நுணிப் பகுதிகளிலேயே முறிக்கப்பட்டிருந்ததை அந்த முதியவர் அவதானத்திற்குட்படுத்தியிருந்தார்.

சுழலில் சிக்கியிருந்த தென்னம் தோப்பு ஒன்றில் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்த தென்னை மரம் ஒன்று அடியோடு சாய்ந்து விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒப்பிட்டளவில் உப்புமாவெளியில் ஏற்பட்டிருந்த சுழல் காற்றினால் சேதங்களின் அளவு குறைந்தளவாக இருந்ததை குறிப்பிடலாம்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தனக்குத் அறிவு தெரிந்த காலம் முதல் குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை உடுப்புக்குளம் மற்றும் உப்புமாவெளியின் பகுதிகளினூடாக சுழல்க் காற்று செல்லும் பாதை இருப்பதை தொடர்ந்து அவதானிக்கலாம்.

ஆயினும் இதுவரையில் அது தொடர்பில் மக்களிடையே எத்தகைய தெளிவூட்டல்களும் வழங்கப்படவில்லை என்பதோடு சுழல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்குமொரு நாளில் அதனை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் அற்றவர்களாகவே இக்கிராம மக்கள் இருக்கின்றனர் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.முல்லைத்தீவில் சுழல் காற்றின் தாக்கம் : காலநிலை வரலாற்று அறிவின் தேவை குறித்து பேசும் முதியவர் | Cyclone Impact On Mullaithivu

கிராமசேவகர் ஒருவர் கிராமம் ஒன்றிற்கு நியமனம் பெற்று வரும் போது அக்கிராமம் பற்றிய வரலாற்றை அறிந்து வைத்திருந்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திறம்படச் செயற்பட முடியும் என்பது இங்கு உற்றுநோக்க வேண்டிய விடயமாகும்.

வாழைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு சுழல் காற்றின் பாதை பற்றிய அறிவு அவசியமானது.அப்போதுதான் அவர்களது முயற்சி பயனுடையதாக அமையும்.

காற்றோடு கூடிய மழைக் காலநிலை நிலவக் கூடிய ஒரு சூழலில் மக்கள் தங்கள் பிரதேசங்களில் காலநிலை வரலாறுகளை தெரிந்து வைத்திருந்தால் எதிர்பாராத சிரமங்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பது தற்பாதுகாப்பான வாழ்வியலுக்கு அவசியமானதாகும்.

கமுகு ஒன்றின் நுணிப்பகுதியை முறித்து விட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.அவ்வாறே வாழை மரங்களும் அவற்றின் நுணிப் பகுதிகளிலேயே முறிக்கப்பட்டிருந்ததை அந்த முதியவர் அவதானத்திற்குட்படுத்தியிருந்தார்.

சுழலில் சிக்கியிருந்த தென்னம் தோப்பு ஒன்றில் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்த தென்னை மரம் ஒன்று அடியோடு சாய்ந்து விழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒப்பிட்டளவில் உப்புமாவெளியில் ஏற்பட்டிருந்த சுழல் காற்றினால் சேதங்களின் அளவு குறைந்தளவாக இருந்ததை குறிப்பிடலாம்.

தனக்குத் அறிவு தெரிந்த காலம் முதல் குறிப்பிட்ட காலத்திற்கொரு முறை உடுப்புக்குளம் மற்றும் உப்புமாவெளியின் பகுதிகளினூடாக சுழல்க் காற்று செல்லும் பாதை இருப்பதை தொடர்ந்து அவதானிக்கலாம்.

ஆயினும் இதுவரையில் அது தொடர்பில் மக்களிடையே எத்தகைய தெளிவூட்டல்களும் வழங்கப்படவில்லை என்பதோடு சுழல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்குமொரு நாளில் அதனை எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் அற்றவர்களாகவே இக்கிராம மக்கள் இருக்கின்றனர் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

முல்லைத்தீவில் சுழல் காற்றின் தாக்கம் : காலநிலை வரலாற்று அறிவின் தேவை குறித்து பேசும் முதியவர் | Cyclone Impact On Mullaithivu