பல்கலைக்கழக ஊழியர்களின் பிரச்சினை தொடர்பான தீர்வினை ஆராயாமல் யாழில் இடம்பெறும் திறப்பு விழா ஒன்றிற்கு வருகை தந்த பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உயர்கல்வி அமைச்சினை வன்மையாக கண்டிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்.(Jaffna) ஊடக அமையத்தில் இன்று (22.05.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் இதனை கூறியுள்ளது.
இது வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கான எந்த விதமான தீர்வினையும் காணாமல் நிதியமைச்சிடமும் திறைசேரி இடமும் கலந்துரையாடுகின்றோம் என்ற வார்த்தையை மாத்திரம் பயன்படுத்தி ஏமாற்றியுள்ளனர்.
எமது பிரச்சினைக்கான உடனடியான தீர்வினை கட்டாயம் பெற்றுதர வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கூறியுள்ளது.