பிரித்தானியாவில் ஆங்கிலப் புலமை இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு சிக்கலை உருவாக்கும் ஒரு அதிரடி நடவடிக்கைக்கு பிரித்தானிய அமைச்சர்கள் தீவிரமாக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியா, அண்மைக்காலமாக புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் பலவற்றை தொடர்ந்து எடுத்துவருகிறது.
ஏற்கனவே சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தும், இன்னமும் அவை திருப்தியளிக்கவில்லை என்கிறார்கள் பிரித்தானியர்கள்.
ஆங்கில மொழித் தேர்வுகள்
ஆகவே, அடுத்தபடியாக, பிரித்தானியாவில் படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள் கூட, பிரித்தானியாவில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்யவேண்டுமானால், அதற்கு தகுதி பெற, ஆங்கில மொழித் தேர்வுகள் எழுதி வெற்றிபெறவேண்டும் என்னும் ஒரு விதியை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.
ஆங்கிலப் புலமை கொண்ட, மிகச்சிறந்த சர்வதேச மாணவர்களை மட்டுமே பிரித்தானியாவில் தக்கவைத்துக்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.