சிங்கப்பூர்எயர்லைன்ஸ் விமானம் நடுவானில் மோசமாக குலுங்கியவேளை விமானத்திற்குள் காணப்பட்ட நிலைமையை பயணிகள் விபரித்துள்ளனர்.
பயணிகள் அங்கும் இங்கும் தள்ளப்பட்டார்கள் பொருட்கள் விழுந்தன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானம் குலுங்கியதால் பிரிட்டனைசேர்ந்த 73 வயது ஜெவ்கிச்சன் என்பவர் கொல்லப்பட்டார் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என சந்தேகம் வெளியாகியுள்ளது .
உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த வேளை விமானம் குலுங்கியதால் 30 பேர் காயமடைந்தனர்.
முதல் சில செகண்ட்களில் பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது என பிரிட்டனை சேர்ந்த அன்ரூ டேவிஸ் தெரிவித்துள்ளார்.
பொருட்கள் பறந்ததே நான் பார்த்ததில்மனதில்நிற்கின்ற விடயம் என அவர்குறிப்பிட்டுள்ளார்.
என் மேல் கோப்பி காணப்பட்டது மிகவும் கடுமையான விதத்தில் விமானம் குலுங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.
விமானம் திடீரென மேல்நோக்கி சாய்ந்தது குலுங்கியது என தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கின்றது என அறிந்து நான் அதற்கு தயாரானேன் தீடீரென விமானம் வேகமாக கீழே செல்ல தொடங்கியது தங்கள் ஆசனங்களில் அமர்ந்திருந்த அனைவரும் விமானத்தின் மேற்பகுதியை நோக்கி வீசப்பட்டனர் என 28 வயது ஜவ்ரான் அஸ்மிர் தெரிவித்துள்ளார்.
சிலர் பயணபொதிகளை வைக்கின்ற கபின்களில் மோதினர் விளக்குகளும் முகக்கவசங்களும் காணப்படும் பகுதிகளில் மோதி அதனை சேதப்படுத்தினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நடுவானில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் சிங்கப்பூரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பொயிங் 777-300ஈஆர் விமானம் 211 பயணிகள் 18 பயணிகளுடன் தாய்லாந்தின் தலைநகருக்கு திருப்பப்பட்டது.
31 பேர்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள சிங்கப்பூர் எயர்லைன்ஸ் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.
விமானம் பத்து மணித்தியாலங்களிற்கு மேல் பயணத்திலிருந்தது மியன்மாரின் ஐராவதி படுகையில் 37000 அடியில் குலுங்க தொடங்கியது விமானசேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பயணிகளிற்கு மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் தாய்லாந்து தலைநகருக்கு மருத்துவ குழுவை அனுப்பியுள்ளோம் என சிங்கப்பூர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
விமானத்திற்குள் நின்றுகொண்டிருந்தவர்கள் சமர்சோல்ட் அடித்தனர்
விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளின் விபரங்களை சிங்கப்பூர் எயர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது இவர்களில் 47 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்
நான் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த விரும்பவில்லை ஆனால்நான் விமானத்தில் பைத்தியம் பிடித்த நிலையில் இருக்கின்றேன் விமானம் அவசரமாக தரையிறங்குகின்றது நான் உங்கள் அனைவரையும் நேசிக்கின்றேன் என தனது மகன் ஜொஸ் குறுஞ்செய்தி அனுப்பினார் என அலிசன் பார்க்கெர் தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியின் பின்னர் நான் இரண்டு மணித்தியாலங்கள் அச்சத்துடன் காத்திருந்தேன் என தெரிவித்துள்ள அவர் அதன் பின்னர்மகன் என்னை தொடர்புகொண்டார் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஆசனப்பட்டியுடன் அமர்ந்திருக்கவேண்டும் பின்னர் விமானத்திற்குள்அவர் விழுந்த நிலையில் காணப்பட்டிருப்பார் என தாயார் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை விடுக்கப்படா நிலையில் விமானம் வேகமாக கீழ் நோக்கி வேகமாக செல்ல தொடங்கியது என தனது மகனின்திருமணத்திற்காக பயணம் செய்துகொண்டிருந்த பிரிட்டனை சேர்ந்த 68 வயது ஜெரி தெரிவித்துள்ளார்.
எனக்கும் மனைவிக்கும் தலையில்அடிபட்டது விமானத்திற்குள் நின்றுகொண்டிருந்த சமர்சோல்ட் அடித்தார்கள் என அவர்தெரிவித்துள்ளார்.
எங்கள் குடும்பத்தை சேர்ந்த எவரும் உயிரிழக்கவில்லை நாங்கள் அதிஸ்டசாலிகள் என கழுத்தில்காயமடைந்த பிரிட்டனை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமானம் அமைதியாக பயணித்துக்கொண்டிருந்தது தீடிரென நான் விமானத்தின் மேல்பகுதியுடன் மோதினேன் என அவர் தெரிவித்துள்ளார்