சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆம் 22 திகதி புதன்கிழமை இன்று மீண்டும் ஆரம்பமானது.
22 திகதி புதன்கிழமை ஆரம்பமான இந்த போராட்டமானது எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
குறித்த விகாரையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்றைய போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.