புத்தளம், மாரவில, பிலாகட்டுமுல்ல பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
மெதகொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதன்போது, காயமடைந்த தந்தை மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.