புலம்பெயர் சமூகம் எமது தமிழ் மக்களின் முழுமையான அபிவிருத்திக்காக முன்வரவேண்டும்

432 0

கடந்த வருடத்தில் இருந்த நிலமையை விட ஏவிளம்பி சித்திரை புதுவருடத்திலாவது புலம்பெயர் சமூகம் எமது தமிழ் மக்களின் முழுமையான அபிவிருத்திக்காக முன்வரவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

கடந்த ஆட்சியாளர்களை விட தற்பொழுதுள்ள நல்லாட்சி என்கின்ற ஆட்சியில் ஓரளவு ஊடக சுதந்திரம், பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையை முன் நின்று கேட்கக்கூடிய சுதந்திரம் உள்ள நிலையில் பெருமளவான மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டனவா என்றால் கேள்விக் குறியாகவே அமைந்துள்ளது.

ஆட்சி மாற்றத்தினால் மக்களின் கோரிக்கைகள் ஏமாற்றபட்ட நிலையில் காணப்படுகின்ற நிலையில், எமது தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலை எமது புலம்பெயர் சமூகங்கள் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கு முன்வர வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தும்பியலை போக்குவதற்கு புலம்பெயர் சமூகங்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் முன்னின்று செயற்பட்டு வருகின்றனர்.

இருந்தபோதும் எமது சமூகத்தின் தேவைப்பாடு மற்றும் வாழ்வியல் விடயத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்து கொண்டு இருக்கின்றார்கள்.

அந்தவகையில்தான் எதிர் காலங்களில் எமது தமிழ் மக்களின் தும்பியலை போக்குவதற்கு புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பு என்பது மேலும் தேவைப்பாடாகவுள்ளது.

ஏவிளம்பி சித்திரை வருடப் பிறப்பு என்பது உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் நல்லதொரு ஆரோக்கியமான விடயத்தினை ஏற்படுத்தவேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் வடகிழக்கு பகுதிகளில் வீதியோரங்களில் மக்கள் சொல்லொன்னாத் துயரத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் ஏவிளம்பி சித்திரைப் புதுவருடத்தில் அரசு வடகிழக்கு தமிழ் மக்களின் முன் நிற்கவேண்டுமென தெரிவித்தார்.