மதுபான போத்தல்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றவர் கைது

24 0

வெசாக் வாரத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் மதுபான  போத்தல்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ள நபர் ஒருவரை அங்கும்புர எகொடமுல்ல பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (20) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேற்படி குறித்த நபரிடம் இருந்து, 75 கசிப்பு ஸ்பிரிட் போத்தல்களை கண்டி பிரதேச போதை  ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவரை திங்கட்கிழமை (20) கைது செய்துள்ளது.

கண்டி பிரதேச போதை  ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அங்கும்புர எகொடமுல்ல பிரதேசத்தில் வீதித்தடை ஒன்று மேற்கொள்ளப்பட்டு இந்த கசிப்பு ஸ்பிரிட் போத்தல்கள்  கையடக்கப்பட்டுள்ளது.

இந்த கசிப்பு குருநாகல் ரிதிகம பிரதேசத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டதுடன், சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவரது வீட்டில் மேலும் 25 கசிப்பு போத்தல்களை கண்டெடுத்துள்ளனர்.

அங்கும்புர எகொடமுல்ல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் வீட்டிலிருந்த மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அங்கும்புர பிரதேசம் மாத்தளை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இவ்வருடம் அரச வெசாக் பண்டிகை மாத்தளை நகரின் மத்தியில் நடைபெறுவதால் மாத்தளை மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை விட அதிக நாட்கள் மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மாத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விற்பனை செய்வதற்காக சந்தேக நபர் இந்த மதுபானத்தை  தயாரித் திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் பிரதேச போதை  ஒழிப்பு பிரிவின்  பிரதம பொலிஸ் பரிசோதகர் திலக் சமரநாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.