சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீளாய்வு செய்யப்படும்

27 0

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தி  பெறுகின்ற ஆணைக்கு ஏற்ப புதிய முன்மொழிவுகள் முன்வைக்கப்படும் எனப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கண்டியில் தெரிவித்துள்ளார்.

கண்டியில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே திருமதி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.

பொருளாதாரத்திற்குப் பூட்டு போடாமல் கடன் சீர்திருத்த வேலைத்திட்டத்தைத் தொடர்வது சம்பந்தமாகச் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காண கலந்துரையாடப்பட்டுள்ளது.

மக்கள் மீது காலவரையின்றி சுமத்தப்பட்டுள்ள சுமை மற்றும் கடன் நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்படும் உதவிகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும் நாட்டின் தேசிய பொருளாதார மேம்பாட்டுக்கும் மற்றும் உள்ளுர்  உற்பத்தி முன்னேற்றத்தினை   கட்டியெழுப்பவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதைத் தடுக்கும் வகையில் கடன் சீர்திருத்த நடவடிக்கையில் நாட்டின் பொருளாதாரத்தை முடக்க தேசிய மக்கள் சக்தி அதற்கு  துணை போகாது என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மக்களுக்குச் சுமை ஏற்படாத வகையில் இந்த இரண்டு செயற்பாடுகளையும் மேற்கொள்வது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டுமெனவும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.