மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும் அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை

27 0

இலங்கையின் விகாரைகளில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும், அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை எனவும், ஒரு நாடு என்ற வகையில் எமது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளில் நிலவும் பலவீனங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே நாம் எதிர்கொள்ளும் சவாலாகும் எனவும் அவர் கூறினார்.

பூஜாபிட்டிய, திவானவத்த ஸ்ரீ போதிருக்கராம விகாரையில் எட்டு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 34 அடி உயர மைத்ரேய போதிசத்துவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திங்கட்கிழமை (20) இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.குணதிலக ராஜபக்ஷ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நிதி நன்கொடையில் இதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் 10% பாடசாலைகள் கூட சோலார்  பெனல்களை பொருத்தவில்லை எனவும் பொருளாதார நெருக்கடி காரணமாகச் சர்வதேச பரிவர்த்தனைகள் வீழ்ச்சியடைந்த யுகம் முடிவுக்கு வருவதாகவும் பிரதமர் கூறினார்.

ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளினால் மலையகத்தில் விகாரைகளுக்குச்   சொந்தமான  பதின்மூன்று இலட்சம் ஏக்கர் காணி  இழக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்நோக்கி வருகிறோம்.

“பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்  எமது  நாட்டை பலவந்தமாக அடக்கினார்கள் அதனால் அடையாளம் அழிக்கப்பட்டு  எமது நாட்டை  அன்று எமது கிராமியத் தலைவர்களும் மலையகத் தலைவர்களும் ஆரம்பித்த மாபெரும் போராட்டத்தினால் எமது நாடு சுதந்திரப் பயணத்தைத் தொடர முடிந்தது.

இன்று வாழும் தலைமுறைக்கும் எதிர்காலத்தில் வாழும் தலைமுறைக்கும் புத்த தர்மத்தைப் பற்றிய ஆழமான புரிதலை அடையக்கூடிய வழிகாட்டுதல் தேவை. புத்தரின் தர்மத்தை உலகிற்கு எடுத்துச் செல்லவும், அதைப் புரிந்து கொண்டு செயல்படவும் வழிகாட்டி தேவை. பௌத்தத்தின் ஆழமான ஆசீர்வாதங்களுடன் வாழ்ந்த ஒரு தலைமுறை எமது கிராமங்களில் இருந்தது.

உணவு கொண்டுவர ஹெலிகாப்டர்களுக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. கிராமத்தில் விவசாயம் செய்ததை சேகரித்து வண்டியில் ஏற்றி பொருளாதாரம் கண்டார். இது பௌத்தத்தின் உன்னத பரிசு. அது நிறுவப்பட்டது, புத்த தர்மத்தின் அடிப்படையில் மனித சமுதாயம் கட்டப்பட்டது. உன்னத நற்பண்புகளால் பிறந்த நாகரீகத்திலிருந்து நம் தேசம் இப்படித்தான் கட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நமது நாடு கடினமான சூழ்நிலையில் உள்ளது. யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்நோக்கி வருகிறோம். உலகமும் அப்படித்தான்.வல்லரசுகள் கூட வாழத் தெரியாத நிலையை இன்று உலகம் அடைந்துள்ளது.

அன்றைய சவால்களை கடந்து சென்ற மாவீரர்களினால் ஒரு நாடு என்ற அடையாளத்தை பேணவும் சிங்கள பௌத்தத்தை ஒன்றிணைந்த தேசத்தில் பாதுகாக்கவும் முடிந்தது. இன்று, அதையெல்லாம் பாதுகாத்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சவாலை நாம் சமாளிக்க வேண்டும்.”