மீனவர்கள் இன்று விடுதலை?

402 0

201607260148154670_Srilanka-Government-end-Tamil-nadu-fisher-men-77-people_SECVPF.gifஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ள 77 தமிழக மீனவர்கள் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.

இதற்கு தேவையான சட்ட உத்தரவுகள் உரிய நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் சில தினங்களில் குறித்த மீனவர்கள் நீதிமன்றங்களால் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊர்காவற்றுறை, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய நீதிமன்றங்களுக்கு 49 மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு நேற்று சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஏனையோரை விடுவிப்பதற்கான உத்தரவு இன்று கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.