எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் – மருந்துகளை கொண்டுவருவதற்காக ரபா எல்லையை திறப்பதற்கான அழுத்தங்களை கொடுங்கள்

42 0

காசாவில் செயற்படும் ஒரேயொரு மருத்துவமனைக்குள் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்  அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து தன்னையும் தனது குழுவினரையும் வெளியேற்றவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மருத்துவமனைக்கு மருந்துபொருட்களை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இஸ்ரேல் ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் கான் யூனிசில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குள் சிட்னியை சேர்ந்த மருத்துவர் மோதர் அல்பெருட்டி உட்பட 16 மருத்துவர்களும் மருத்துவசுகாதார பணியாளர்களும் சிக்குண்டுள்ளனர்.

இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் கொல்லப்பட்டது போன்ற நிலை எங்களிற்கு ஏற்படுவதற்கு முன்னர் எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என்பதே எங்கள் செய்தி என அவர் கார்டியன் அவுஸ்திரேலியாவிற்கு தெரிவித்துள்ளார்.

காசா மனிதாபிமான பொருட்கள் மருத்துவபணியாளர்களை பெறுவதற்காக எல்லையை திறக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அல்பெருட்டி மே மாதம் முதலாம் திகதி பாலஸ்தீன அமெரிக்க மருத்துவ குழுவுடன் காசாவிற்கு சென்றார்.

நாங்கள் 13 ம் திகதி அங்கிருந்து வெளியேற திட்டமிட்டிருந்தோம் எனினும் ஏழாம் திகதி இஸ்ரேலிய படையினர் ரபாவை கைப்பற்றியதால் எங்களை அங்கிருந்து வெளியேறமுடியவில்லை சர்வதேச மனிதாபிமான பணியாளர்களிற்கான ஒரேயொரு பாதையையும் அவர்கள் மூடிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் பணியை  ஒருவாரத்திற்கு முன்னரே பூர்த்தி செய்துவிட்டோம்; எங்கள் குடும்பத்தவர்கள் கவலையடைந்துவிட்டனர் அவர்களிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்கின்றோம் மூன்றுவாரங்களின் பின்னர் நாங்கள் களைத்துப்போய்விட்டோம் எனவும் அவுஸ்திரேலிய மருத்துவர் தெரிவித்துள்ளார்.

அல்பேருட்டி குழுவினர் காசாவிற்குள் மருந்துகள் மருத்துவம பொருட்களை எடுத்துச்சென்றனர் ஆனால் அவைமுடிவடையும் நிலையில் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார்.